உரை -1: 01/12/2024

தமிழ்நாட்டின் பௌத்தம் – முதல் அமர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொல்லியல் அறிஞர் பத்மாவதி அவர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார். களப்பிரர்களின் எழுச்சி மற்றும் தமிழக பௌத்த பேரரசின் கட்டமைப்பை மிகத் துல்லியமாக படம் பிடித்து காட்டினார். வரலாற்றில் இருண்ட பக்கம் என சித்தரிக்கப்பட்ட பௌத்த பேரரசின் மீது மிகச்சிறந்த ஒளியைப் பற்றிய அறிஞர் பத்மாவதி அவர்களின் கருத்துரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இக்கூட்டத்தில் 125 உபாசகர்கள் இணைய வழியில் கலந்து கொண்டார்கள். மேலும் ஏராளமான பேர் இணைப்பில் நுழைய முடியாமல் இருந்தது குறித்து தகவல்கள் பரிமாறினார்கள்.
மொத்தமாக மூன்று மணி நேரம் இக்கருத்தரங்கம் நடைபெற்றது யாரும் வெளியேறாமல் இறுதிவரை அமர்ந்தது இக்கருத்தரங்கின் சிறப்பு. தமிழ்நாட்டின் பௌத்தம் குறித்து அனைத்து தரப்பினரிடம் ஒரு பெரும் ஆர்வம் உருவாகி இருப்பது இக்கருத்தரங்கின் மூலம் தெளிவாகி இருக்கிறது. தொடர்ந்து நடைபெற உள்ள இக்கருத்தரங்கம் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை உண்டாக்கும்.
அன்புடன்
கௌதம சன்னா
உரை -2: 07/12/2024

நாள் 07.12.2024
சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 8.00 மணிவரை
800 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் பௌத்தத்தை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சியில் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் இப்பணியில் அயராது உழைக்கும் நமது தோழர்கள் வரலாற்று தெளிவு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் பௌத்தத்தின் தேடல் குறித்தும் தமிழ்நாட்டில் அதன் தொன்மை குறித்தும் விளக்கவேண்டிய பொறுப்பில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.
பண்டிதர் அயோத்திதாசர், பேராசிரியர் லட்சுமி நரசு, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட மேதைகள் நமக்கு பௌத்தத்தை அறிமுகப்படுத்தினாலும், தமிழ்நாட்டின் அதன் வரலாற்று தடங்களை முழுமையாக அறியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். இதன் காரணமாக பொதுச் சமூகத்தோடு தமிழ்நாட்டு பவுத்தர்கள் தொடர்பில்லாமலும், விவாதங்களின் போது போதிய வரலாற்றுத் தரவுகளை முன்வைக்க முடியாமல் தடுமாறுவதை பார்க்கிறோம். எனவே இந்த அவலநிலையில் இருந்து விடுபடவேண்டியது பௌத்தர்களாக தன்னை கருதிக்கொள்ளும் ஒவ்வொருவரின் கடமை என்பதை நமது பேரவை உணர்ந்து இருக்கிறது.
இந்தக் குறைப்பாட்டை சரிசெய்யும் விதமாக, கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள், நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களிடம் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் விளைவாக தமிழ்நாட்டு பவுத்தம் குறித்து விரிவான கருத்துரையாடலை கட்டமைக்க வேண்டியது தேவை என்பதை உணர்ந்தோம். அதற்கு அனைத்து அறிஞர்களும் தங்களால் இயன்ற ஆய்வு உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் இது ஒரு முன்னுதாரணமான வரலாற்று நிகழ்வாகும். அறிஞர்களின் ஆர்வம் மற்றும் பங்களிப்பு தமிழ்நாட்டு பவுத்தர்களின் கற்றுக்கொள்ளும் ஊக்கம் ஆகியன இக்கருத்தரங்கை ஒருங்கிணைக்க நமக்கு உதவுகின்றன.
எனவே 2024 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழ்நாட்டு பவுத்தம் தொடர்பான அனைத்து கோணங்களும் வரலாற்று தரவுகளோடு ஆவணங்களோடும் சான்றுகளோடும் அறிஞர்கள் விளக்க உள்ளனர். இந்த வாய்ப்பை தமிழ்நாட்டு பௌத்தர்கள் மட்டுமின்றி பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
இத்தொடரின் 2-ஆம் நிகழ்வாக தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வாளர் முனைவர் க.சுபாஷிணி அவர்கள் நாகப்பட்டினம் பௌத்த சின்னங்கள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். எனவே அந்த இருட்டடிக்கப்பட்ட வரலாற்றின் மீது ஒளிபாய்ச்ச வரும் வரலாற்று ஆய்வாளர் முனைவர் க.சுபாஷிணி அவர்களின் உரையை நீங்கள் அனைவரும் ஆர்வத்தோடு கேட்டு தெளிவு பெறவேண்டும். அதை மக்களிடம் பரப்ப வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இக் கருத்தரங்கிற்கு உங்களை அழைக்கிறோம்.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை
TamilNadu Buddhist Sanga Council is inviting you to a scheduled Zoom meeting.
Topic: நாகப்பட்டினம் பௌத்த சின்னங்கள்
Time: Dec 7, 2024 06:00 PM India
உரை -3: 14.12.2024
