Author: admin

Weekly Online Lectures The Tamil Nadu Buddhist Sanga Council organizes weekly lectures on Buddhism for the benefit of its members and Buddhists worldwide. On this page, viewers can explore insightful lectures delivered by esteemed scholars on a wide range of topics, including Buddhist history, archaeology, literature, teachings, and practices, with a special focus on Buddhism in Tamil Nadu. Link to the Playlist: Buddhism Lecture Series Play List களப்பிரர்களும் பௌத்த பேரரசு உருவாக்கமும் எழுச்சியும் – முனைவர் ஆ.பத்மாவதி 2. நாகப்பட்டின பௌத்த சின்னங்கள் – முனைவர் க. சுபாஷிணி 3. கோயில்களில் புத்தத் தடயங்கள் – முனைவர் ராஜேஸ்வரி செல்லய்யா 4. கடலூர் மாவட்டத்தில் பௌத்த தடயங்கள் – முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன் 5.…

Read More

பெறல் தமிழ்நாட்டின் அனைத்து பௌத்தர்கள், பௌத்த இயக்கத்தவர், அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்கள், அனைத்து காட்சி ஊடகத்தினர் மற்றும்  மற்றும் பொதுமக்கள் அன்புடையீர் வணக்கம். 800 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக 18.02.2025 செவ்வாய்க் கிழமை அன்று தமிழ்நாட்டில் – காஞ்சீவரத்தில் நடைபெறும் 150 பிக்குகள் கலந்துக் கொள்ளும் மாபெரும் தம்மப் பேரணி மற்றும் திரிபிட சத்தம்ம சஜ்ஜயனா எனுதி திரிபிடக சத்தம்ம ஓதும் மாநிகழ்வில் (மாநாட்டில்) கலந்துக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்வை தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணையம் ஒருங்கிணைக்கிறது. காலை 8 மணிக்கு காமாட்சி அம்மன் சன்னதி தெரு அருகே தொடங்கும் பிக்குமார்கள் தம்மவலம் காஞ்சி புத்தர் திருக்கோயிலை அடைந்தப் பிறகு காலை  சஜ்ஜயனா நிகழ்வுத் தொடங்கும். மாலை 6 மணி வரை அது நடைபெறும். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் மகா சங்காதிபதி வண.பிக்கு தம்மசீலர் தலைமையில் சங்க மகா துணைத்தலைவர்கள் வண.பிக்கு பதாந்த் நாகராஜ், வண.பிக்கு.புத்தப்…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை மேற்கொண்ட பல்வேறு பணிகளும் காஞ்சிபுரத்தில் 18,02,2025 அன்று நடைபெற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தியாகனூர் மாநாட்டில் பேரவை 800 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பிக்கு சங்கத்தை மீட்டெடுத்து நிறுவியது. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் திரிபிடகத்தை ஓதி பகவன் புத்தரின் போதனைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கான பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை பின்வருமாறு காணலாம்.

Read More

உரை -1: 01/12/2024 தமிழ்நாட்டின் பௌத்தம் – முதல் அமர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொல்லியல் அறிஞர்  பத்மாவதி அவர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார். களப்பிரர்களின் எழுச்சி மற்றும் தமிழக பௌத்த பேரரசின் கட்டமைப்பை மிகத் துல்லியமாக படம் பிடித்து காட்டினார். வரலாற்றில் இருண்ட பக்கம் என சித்தரிக்கப்பட்ட பௌத்த பேரரசின் மீது மிகச்சிறந்த ஒளியைப் பற்றிய அறிஞர் பத்மாவதி அவர்களின் கருத்துரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.இக்கூட்டத்தில் 125 உபாசகர்கள் இணைய வழியில் கலந்து கொண்டார்கள். மேலும் ஏராளமான பேர் இணைப்பில் நுழைய முடியாமல் இருந்தது குறித்து தகவல்கள் பரிமாறினார்கள்.மொத்தமாக மூன்று மணி நேரம் இக்கருத்தரங்கம் நடைபெற்றது யாரும் வெளியேறாமல் இறுதிவரை அமர்ந்தது இக்கருத்தரங்கின் சிறப்பு. தமிழ்நாட்டின் பௌத்தம் குறித்து அனைத்து தரப்பினரிடம் ஒரு பெரும் ஆர்வம் உருவாகி இருப்பது இக்கருத்தரங்கின் மூலம் தெளிவாகி இருக்கிறது. தொடர்ந்து நடைபெற உள்ள இக்கருத்தரங்கம் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை விதிமுறைகள் அங்கீகரித்தல் மற்றும் மாநில 2வது பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை விதிமுறைகள் அங்கீகரித்தல் மற்றும் 2வது பொதுக்குழு கூட்டம் சங்க பரிபாலன மகாசங்காதிபதி பிக்கு தம்மசீலர், துணை சஙாகாதிபதி பிக்கு புத்தபிரகாசம், பிக்கு ஜெயசீலர் பங்கேற்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமையில், சிறுபான்மை உறுப்பினர் அவை பொருளாளர் மகாதினகரன் வரவேற்பில், இணை செயலாளர் அம்பேத்ஆனந்தன் மற்றும் விகார் பரிபாலன சங்கரத்தினர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. சங்கப் பேரவை ஆண்டறிக்கையை விகார் கவுன்சில் செயலாளர் ஆர் திருநாவுக்கரசு, வரவு செலவு நிதிநிலை அறிக்கையை பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை ஆணையத்தில் பௌத்தர்களின் நலன் குறித்த அறிக்கையை சிறுபான்மை ஆணைய பௌத்த உறுப்பினர் வழக்கறிஞர் வசந்த், புத்த சின்னங்கள் பாதுகாப்பு குழு அறிக்கையை குழு செயலாளர் சு.சுந்தரவடிவேல், பௌத்த மகளிர் கழக அறிக்கையை அதன் பொருளாளர் ராதாஜெயலட்சுமி, பௌத்த இளையோர் கழக அறிக்கையை அதன் செயலாளர் தம்மதேவா, புதுச்சேரி சங்கப் பேரவையின் அறிக்கையை அதன் செயலாளர்…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பௌத்தர்களின் பிக்கு பிக்குணியர்களின் சங்கம் பீடமேற்றுக் கொண்டது. சேலத்திற்கு அருகே உள்ள தியாகனூரில் 14.05.2023 அன்று இம்மாநாட்டில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட பௌத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். தியாகனூர் மாநாடு சேலம் மாவட்டம் பண்டைய காலத்தில் மகதை நாடு என்று அழைக்கப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் மாவட்டம் சேலம் ஆகிய பகுதிகள் அக்காலத்தில் இணைந்து இருந்தன. பௌத்தம் செழித்தோங்கி இருந்த அந்த பகுதியில் ஏராளமான பௌத்த சின்னங்கள் கிடைத்தபடி உள்ளன. அவற்றுள் முக்கியமானது தியாகனூரில் கிடைத்துள்ள மாபெரும் பௌத்த சிலையாகும். அமர்ந்த நிலையில்  உள்ள இந்த புத்தரின் சிலை எட்டடி உயரம் கொண்டதாக விளங்குகிறது. அந்த ஊரில் இரண்டு புத்தர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த சிலைகள் அமைந்துள்ள ஊரை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சங்கத்தின் தொடக்க…

Read More

தமிழ்நாடு இளைய பௌத்தர் கழகம்   தலைமை நிர்வாக குழு அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கம் மற்றும் விகார் கவுன்சில் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழக பௌத்த இளையோர் கழகம் பொறுப்பாளர்களாக சிறிய மாற்றத்தோடு பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு இளைய பௌத்தர் கழகம் பெயர்                                         பொறுப்பு க.தம்மதேவா, செஞ்சி மாநில செயலாளர் டாக்டர் கரு சந்தானம், நீலகிரி மாநில துணைச் செயலாளர் த.யோகானந்தம், வேலூர் மாநில துணைச் செயலாளர் ஆதிராஜா, பெரம்பலூர் மாநில துணைச் செயலாளர் ஆர்.பாக்யராஜ், விழுப்புரம் மாநில துணைச் செயலாளர் சீ.வினோத்குமார், கும்பகோணம்                      மாநில பொருளாளர் இ.செந்தில்குமார் காஞ்சிபுரம் மாநில துணைப் பொருளாளர் …

Read More

புத்தர் சிலைகள் மீட்பு மற்றும் புத்த திருக்கோயில் சொத்துப் பாதுகாப்பு குழு தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பான நமது பேரவையின் மகா சங்காதிபதி தலைமையில், நடைபெற்ற ஆலேசனைக் கூட்டம்  09.07.2023 அன்று ஞாயிறுக் கிழமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழ்நாட்டில் உள்ள கேட்பாரற்றுக் கிடக்கும் புத்தர் சிலைகளை மீட்பது மற்றும் நமது விகார்கள் மற்றும் புத்தத் திருக்கோயில்களை சீரமைத்து அதன் மூல சேத்தியத்தில் கல்லால் வடிக்கப்பட்ட புத்தரின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பதை முதற்பணியாகக் மேற்கொள்ள   முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அதற்கென தனி வழிகாட்டல் மற்றும் செயல்பாட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு தலைமை பௌத்த அமைப்பிற்கான அமைப்பு விதிமுறைகளை உருவாக்க என இரண்டுக் குழுக்கள் அமைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் பின்வரும் பிக்கு மற்றும் உபாசகர்கள் இடம்பெறுகிறார்கள். TNBSC புத்தர் சிலைகள் மீட்பு மற்றும் புத்த திருக்கோயில் சொத்துப் பாதுகாப்பு குழு தலைமை             – மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய…

Read More

புத்த மதத்தினை தமிழ்நாட்டில் வளர்க்கவும், பரவச் செய்யவும் உங்களிடமிருந்து உதவிகள் தேவை. தம்மத்தின் மீது ஆர்வம் உள்ள உபாசகர்கள், புரவலர்கள் தாராள தானம் செய்து தம்மத்தை பரவச் செய்வீர். உங்கள் நன்கொடையினை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி ரசீதினைப் பெற்றுக் கொள்ளுங்கள். TamilNadu Buddhist Sanga Council Trust Current A/c No. 7106398104 Indian Bank, Vadapalani Branch. Chennai 600118 IFSC Code: IDIB000V001

Read More