பௌத்தர்களின் கவனத்திற்கு

புத்த மதத்தை தழுவ விருப்பமா ?

பௌத்தத்தைத் தழுவ விரும்புவோர் - தம்ம தீட்சைப் பெறவும், புத்த பிக்குகளின் உதவியினைப் பெறவும் இங்கே பதிவிடவும்

உறுப்பினர் படிவம் (Buddhist Citizen Portal)

புத்த மதத்தை தழுவியவர்கள் தமது பெயர்களை இங்கே பதிவு செய்து சங்கப் பேரவையில் உறுப்பினராக இணையலாம்.

பௌத்த குடும்ப நிகழ்வுகளுக்கு

பௌத்தர்கள் தமது குடும்ப நிகழ்வுகளை நடத்த பிக்கு பிக்குணிகள் மற்றும் புத்த பூசகர்களின் உதவியினைப் பெற இங்கே பதிவிடவும்

 

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை (TNBSC)

மிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை – சங்க பரிபாலன மகா சங்காதிபதி அவர்களின் தலைமையின் கீழ் 800 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மரபின்படி மீண்டும் தோற்றம் பெறுகிறது. இச்சங்கம் தமிழக பௌத்த மதத்தின் தலைமைப் பீடமாக மகா சங்காதிபதியும் அவரது நிர்வாகக் குழுவும் இயங்குகிறது. இதில் பின்வரும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள.

பிக்கு பிக்குணிகளின் சங்கம், புத்தர் கோயில்கள் மற்றும் விகார்களை நிர்வகிக்கும் திருக்கோயில் மற்றும் விகார் கவுன்சில்,  தமிழ்நாடு அரசினால் நியமிக்கப்பட்டுள்ள அரசுசார் உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்நாடு பௌத்த சிறுபான்மைக்குழு உறுப்பினர்கள் குழு,  பௌத்த இளையோர்களை ஒருங்கிணைக்கும் பௌத்த இளையோர் கழகம், தமிழ்நாட்டு பௌத்தப் பெண்களை ஒருங்கிணைக்கும் பௌத்த பெண்கள் இயக்கம்,  மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட பௌத்தச் சின்னங்களை மீட்டெடுத்து பாதுகாக்க பௌத்த சின்னங்கள் கண்காணிப்பு குழு மற்றும் தமிழகம் முழுவதும் சங்கப் பேரவையினை வழிநடத்துவதில் பங்கேற்கும் பரந்துப்பட்ட உறுப்பினர்களின் கட்டமைப்பு என பரந்த அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை.

இந்த சங்கப் பேரவை பௌத்த இயக்கமல்ல, பௌத்த கூட்டமைப்பும் அல்ல. எல்லா பௌத்த அமைப்புகளோடும், இயக்கங்களோடும், ஆர்வலர்களோடும் இணைந்தும் அரவணைத்தும் இயங்கும் தமிழ்நாட்டிற்கான முழுமையான தலைமை பௌத்த மத அமைப்பு.  இந்த பௌத்த மத அமைப்பின் நிழலில் அனைவரும் இணைந்து பணியாற்றுவதற்கான முழுமையான வாய்ப்பு. தம்மத்தில் நிலைபெறச் செய்யும் வரலாற்று நிகழ்வு.

PLEASE DONATE

உங்கள் உதவியோடு தமிழ்நாட்டில் பௌத்தத்தை வளர்த்தெடுப்போம். நன்கொடை வழங்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்

பேரவை தொடக்கவிழா (காஞ்சீவரம் - 07.11.2022)

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் தொடக்க விழா மற்றும் சங்கரத்தினர்களின் பதவியேற்பு விழா

தியாகனூர் பௌத்த மாநாடு (14.05.2023)

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் தியாகனூர் பௌத்த மாநாட்டின் புகைப்படங்கள்

காணொளிகள்

சிறப்பு செய்திகள்

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை மேற்கொண்ட பல்வேறு பணிகளும் காஞ்சிபுரத்தில் 18,02,2025 அன்று நடைபெற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.…