புத்தர் சிலைகள் மீட்பு மற்றும் புத்த திருக்கோயில் சொத்துப் பாதுகாப்பு குழு
தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பான நமது பேரவையின் மகா சங்காதிபதி தலைமையில், நடைபெற்ற ஆலேசனைக் கூட்டம் 09.07.2023 அன்று ஞாயிறுக் கிழமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழ்நாட்டில் உள்ள கேட்பாரற்றுக் கிடக்கும் புத்தர் சிலைகளை மீட்பது மற்றும் நமது விகார்கள் மற்றும் புத்தத் திருக்கோயில்களை சீரமைத்து அதன் மூல சேத்தியத்தில் கல்லால் வடிக்கப்பட்ட புத்தரின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பதை முதற்பணியாகக் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அதற்கென தனி வழிகாட்டல் மற்றும் செயல்பாட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு தலைமை பௌத்த அமைப்பிற்கான அமைப்பு விதிமுறைகளை உருவாக்க என இரண்டுக் குழுக்கள் அமைக்கப்படுகிறது. அந்த அமைப்பில் பின்வரும் பிக்கு மற்றும் உபாசகர்கள் இடம்பெறுகிறார்கள்.
TNBSC புத்தர் சிலைகள் மீட்பு மற்றும் புத்த திருக்கோயில் சொத்துப் பாதுகாப்பு குழு
தலைமை – மகா சங்காதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்ம சீலர்
ஒருங்கிணைப்பாளர் – கௌதம சன்னா
மாநிலக் குழு
செயலர் – உபா. சுந்தர வடிவேல்
இணைச்செயலர் – உபா. தேவேந்திரன்
துணைச் செயலார்கள் – பிக்கு பௌத்தம் பாலா, உபா. திருநாவுகரசு, உபா. புத்த பெருமாள்,
உபா.வசந்த், உபா.ஏ.சி.குமார் உபா.மகேந்திரவர்மன்
பணிகள் – 1. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியல் உள்ள புராதன புத்தர் சிலைகள் மற்றும் கைவிடப்பட்ட புத்தர் மீட்டு கோயில் அமைப்பது, 2. புத்தர் திருக்கோயில்களில் புதிய கற்சிலை புத்தர் கோயில்களை அமைப்பது. 3. தமிழ்நாட்டில் உள்ள பௌத்த சொத்துக்களை மீட்டு பாதுகாப்பது மற்றும் தேவைப்படும் 4. அனைத்து சிறுபான்மைக்குழு உறுப்பினர்களும் இவற்றுக்கு உதவி புரிய வேண்டும்.
இவண்
கௌதம சன்னா
தலைமை ஒருங்கிணைப்பாளர்