தமிழ்நாடு இளைய பௌத்தர் கழகம் தலைமை நிர்வாக குழு அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கம் மற்றும் விகார் கவுன்சில் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழக பௌத்த இளையோர் கழகம் பொறுப்பாளர்களாக சிறிய மாற்றத்தோடு பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு இளைய பௌத்தர் கழகம்
பெயர் பொறுப்பு
- க.தம்மதேவா, செஞ்சி மாநில செயலாளர்
- டாக்டர் கரு சந்தானம், நீலகிரி மாநில துணைச் செயலாளர்
- த.யோகானந்தம், வேலூர் மாநில துணைச் செயலாளர்
- ஆதிராஜா, பெரம்பலூர் மாநில துணைச் செயலாளர்
- ஆர்.பாக்யராஜ், விழுப்புரம் மாநில துணைச் செயலாளர்
சீ.வினோத்குமார், கும்பகோணம் மாநில பொருளாளர்
- இ.செந்தில்குமார் காஞ்சிபுரம் மாநில துணைப் பொருளாளர்
- பூ முஞானம் விழுப்புரம் கிழக்கு மண்டல செயலாளர்கள்
- வ.சிவா, வேலூர் வடக்கு மண்டல செயலாளர்கள்
- எ.கொ.அம்பேத்கர், அரூர் மேற்கு மண்டல செயலாளர்கள்
- ராம்ஜி கள்ளக்குறிச்சி நடு மண்டல செயலாளர்கள்
- எ.ரகு, சென்னை கிழக்கு மண்டல செயலாளர்கள்
- கே சரவணன் ஓசூர் மாநில செயற்குழு உறுப்பினர்
- என். முத்துக்குமார் பள்ளூர் மாநில செயற்குழு உறுப்பினர்
- கலைவாணன் விழுப்புரம் மாநில செயற்குழு உறுப்பினர்
- த.தேவேந்திரன் அரக்கோணம் மாநில செயற்குழு உறுப்பினர்
- ரூபன் சக்ரவர்த்தி திருத்தணி மாநில செயற்குழு உறுப்பினர்
- செல்வமணி காஞ்சிபுரம் மாநில செயற்குழு உறுப்பினர்
- கார்த்திக் சங்கராபுரம் மாநில செயற்குழு உறுப்பினர்
- பௌத்த பெரியசாமி கள்ளக்குறிச்சி மாநில செயற்குழு உறுப்பினர்
- கௌதம் சத்துவா செஞ்சி மாநில செயற்குழு உறுப்பினர்
- வி.கார்மேக கண்ணன், செஞ்சி மாநில செயற்குழு உறுப்பினர்
மேற்கண்டப் பொறுப்பளார்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள். பிற பொறுப்பாளர்கள் சங்கம் மற்றும் விகார் கவுன்சிலின் ஆலோசனைக்குப் பின்னர் நியமிக்கப்படுவார்கள். எனவே, அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேதியில் அறிவிக்கப்படவுள்ள இடத்தில் கூடி தமது முதல் ஆலோசனைக் கூட்டத்தினை மகா சங்கப் பேரவையின் பிரதிநிதிகள் வண.பிக்கு.பாதாந்த் நாகராஜ் மற்றும் வண.பிக்கு.புத்தபிரகாசம் ஆகியோரின் முன்னிலையில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பின்வரும் பணிகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.
- மகா சங்கப் பேரவையின் மகா சங்காதிபதி உள்பட பிற பிக்கு மற்றும் பிக்குணிமார்கள் மற்றும் சங்க விகார்களின் கவுன்சில் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழாவிற்கான நாளினை குறித்தல் மற்றும் அதற்கான நிதிக்குழுவினை பரிந்துரை செய்தல்.
- இளைய பௌத்தர்களுக்கான அடுத்த ஓராண்டுக்கான திட்டங்களை முன்னெடுத்தல்.
- இளைய சமூதாயத்தினருக்கு பௌத்தத்தை அறிமுகம் செய்தல் மற்றும் அமைப்பாக்குதல்
- விகார்களை அடையாளம் காணுதல், அவற்றை சீரமைப்பு செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான அறிக்கைகளை தயாரித்தல்.
- விகார்களில் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகளை பயிற்றுவித்து கண்காணித்தல், வழிகாட்டுதல்.
- இத்தற்காலிகக் குழு மேற்கொண்டப் பணிகளை மேற்கொண்டு பகவன் புத்தரின் அருளறத்தினை தமிழகம் எங்கும் உலகு தழுவிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.
தம்மத்தில் நிலைத்திருங்கள்.
இவண்
ஜா.கௌதம சன்னா வண.பிக்கு.போதி அம்பேத்கர்
நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்க பரிபாலன மகா செயலர்