ஜெய்பீம் 👍 நமோ புத்தா🙏
காஞ்சிபுரத்தில் நடந்த பௌத்த சங்கப் பேரவையில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது..
பௌத்தம் பற்றி புரிதல் இருந்தாலும் சங்கத்தை பற்றிய புரிதல், ஈடுபாடு மற்றும் அதன் முழு வழிமுறைகளையும் முக்கியத்துவத்தையும் புரிந்துக்கொண்டேன்.
திரு கௌதம சன்னா அவர்கள் உரையாற்றிய போது சங்கத்தின் முழு விளக்கத்தையும், அவசியத்தையும்,தெளிவாக எடுத்துரைத்தார் குறிப்பாக “இதுவரை நாம் எல்லாரும் Monoact பண்ணிட்டு இருக்கோம்”
தமிழ்நாடு முழுவதும் பௌத்த கருத்துக்கள் அங்கங்கே இருந்தாலும் அதெல்லாம் ஒரு Monoact மாறி தனித்தனியாய் இயங்கி வருகிறது அதை யாருமே கண்டுக் கொள்ளமாட்டார்கள்..
அது ஒரு சங்கமாக இருக்கும்போதுதான் அதனுடைய செயல்பாடுகளும் ஒரு சரியான முறைப்படி நடக்கும் அதோட output சரியானதாக இருக்கும் என்று தெளிவாக கூறியிருந்தார்.
அதன்பின், பௌத்தத்தில் இருக்கும் பிரிவுகளைச் பற்றி விளக்கினார்… புத்தரை உருவ வழிபாடு செய்வது… கடவுளாகக் கொண்டு அல்ல அது தவறு…
ஆனால் நாம் அவருடைய உருவத்தை வழிபாடு செய்வது ஆசானாக கொண்டு ஞாபகப்( remember) படுத்துவதற்காக தான் எனும் முழு பௌத்த சிந்தனையின் படி தம்மம் மட்டுமே மனிதனை வழிநடத்தும் எனும் கொள்கையை எடுத்துரைத்தார்….”தம்மம் கற்றல் தம்மம் ஆகாது” என்பதை நான் படித்து இருக்கிறேன்… ஆனால் அதற்கு இயல்பான விளக்கம் அளித்திருந்தார்…
நாம் எவ்வளவு படித்திருந்தாலும் படித்தவர்கள் எல்லாம் சரியான பாதையில் பயணிக்கிறார்களா என்றால் அது கேள்விகுறி தான்… அது சில நேரங்களில் தவறக் கூடும் “சரியானதை படித்திருக்க வேண்டும் தம்மத்தை படித்திருக்க வேண்டும்”…
தம்மத்தை நடைமுறை வாழ்வியலோடு ஒன்றுப்படுத்தி செயல்பட வேண்டும்…அவர்கள் வாழ்க்கை தான் சிறப்பாக இருக்கும் என்பதை இயல்பாகவும், தெளிவாகவும், கூறியிருந்தார்….
இந்த வாய்ப்பளித்த தமிழ்நாடு பௌத்த சங்கத்திற்கு நன்றிகள் மற்றும் எங்கள் அறிவுச்சுடருக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்….💙
நமோ புத்தா 🙏
K. முத்துலட்சுமி அறிவுச்சுடர் மாணவி,

