தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை நிகழ்வு இன்று 07.11.2021 காஞ்சீவரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,

800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கென ஒரு சங்கப் பேரவை இன்று தொடங்கப்பட்டுள்ளது,
தமிழகத்தில் பௌத்தர்களுக்கு தலைமை அலுவலகம் திருமுல்லைவாயல் பகுதியில் அமைய உள்ளது,
தமிழகத்தில் இதுவரை நாம் பார்த்த பௌத்தம் வேறு இனிப்பார்க்கப்போகிற பௌத்தம் வேறு,
இந்நிகழ்வில், பௌத்தம் இல்லாத மற்ற மதத்துறவிகள், மத குருமார்கள் பௌத்தத்தின் உட்கூறுகளை பௌத்த வாழ்வியலை எடுத்து கூறிய போது இனிவரும் பௌத்தம் அனைத்து மதங்களைப் போன்று ஒரு பெரிய மத ஒற்றை தலைமை ஆளுமை செலுத்தப்போகிறது,
அதுவும் பிக்குகள் தான் அத் தலைமையாளர்கள் என்று நினைக்கிற போது நமக்கே ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது, இதுவரை கானாத இன்று கண்ட அற்புத நிகழ்வு இது,
தமிழகத்தில் இதுவரையில்லாத பௌத்தத்தின் வளர்ச்சி இந்த சங்கத்திiன் கூட்டுமுயற்சியில் வளரும் என்பதில் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதின் மூலம் புதிய தெம்பு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து விகார் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து கௌரவித்த அமைப்பு இன்று தான் முதன்முறையாக கண்டு மகிழ்ந்தேன்,
பெரிய தோலைநோக்குப் பார்வையில் இச் சங்கம் இருக்கப்போகிறது, இளைஞர்கள் பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்,
இந்த நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளர் திரு, கௌதம சன்னா அவர்கள் பொறுப்பேற்று இன்று இவரின் உரை பௌத்த பிக்குகளுக்கும் உபாசகர்களுக்கும் உறவுமுறை, எப்படி இருத்தல் வேண்டும், பௌத்தம் எப்படி அடுத்த கட்டம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு பயிலரங்கமே நடத்திவிட்டார்,
பௌத்த பிக்குகளுக்கும் சங்கத்தின் அடையாள அட்டையும் வழங்கி ஒருகுடையின் கீழ் பிக்குகளையும் இன்று இணைக்கப்பட்டுள்ளது,
தமிழ்நாடு பௌத்த தலைமை குருவாக மகாசங்காதிபதி வணக்கத்திற்குறிய பிக்கு தம்மசீலர் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்,
வருங்காலத்தில் வரலாறு படைக்கும்
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவைக்கு என்னைப் போன்ற இளைஞர்கள் என்றுமே உறுதுணையாக நிற்ப்போம்,
வாழ்த்தும் நன்றியும்.!
ஜெய்பீம். நமோபுத்தாயா.!
சு.இளங்கவி

