TNBSC Letter 27.05.2022
தமிழ்நாடு பௌத்த விகார்களுக்கான
தலைமை நிர்வாக குழு அறிவிப்பு
முதல் பட்டியல்
அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விகார்களுக்கான தலைமை நிர்வாகிகள் குழு தற்காலிகமாக அமைக்கப்பட வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மேன்மைக்குரிய விகார் கவுன்சில் அறிவுறுத்தியதின் பேரில் சங்கா கவுன்சிலின் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் விகார் கவுன்சில் பொறுப்பாளர்களாக பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
| விகார் கவுன்சில்
தலைமைப் பொறுப்பாளர்கள் |
மாவட்ட சிறுபான்மையின் குழு பௌத்த உறுப்பினர்கள் ஆயம் |
|
விகார் மகா செயலர் உபாசகர். காஞ்சி. திருநாவுக்கரசு விகார் மகா துணைச் செயலாளர்கள் உபாசகர். பௌத்தப் பெருமாள் உபாசகர். வசந்தராமன் விகார் மகா காசாளர் உபாசகர் கோ. பார்த்திபன் விகார் கிழக்கு மண்டல செயலாளர் உபாசகர். ஜெ.தர்மேந்திரன் விகார் மேற்கு மண்டல செயலாளர் உபாசகி. பிரியா விகார் தெற்கு மண்டல செயலாளர் உபாசகர். சி.சிவஞானப் பிரகாசம் விகார் வடக்கு மண்டல செயலாளர் உபாசகர். பௌத்த பழனி செய்தித் தொடர்பாளர் உபாசகர். ஏ.சி.குமார் தகவல் தொழில்நுட்ப தொடர்பாளர் உபாசகர். சீறிதர் கண்ணன்
|
செயலாளர் உபாசகர். போதி சந்திரன்
பொருளாளர் உபாசகர். மகா.தினகரன்
|
மேற்கண்டப் பொறுப்பளார்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள். பிற பொறுப்பாளர்கள் சங்க கவுன்சிலின் ஆலோசனைக்குப் பின்னர் நியமிக்கப்படுவார்கள். எனவே, அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் 05.06.2022 அன்று காஞ்சி புத்த விகாரையில் கூடி தமது முதல் ஆலோசனைக் கூட்டத்தினை மகா சங்கப் பேரவையின் பிரதிநிதிகள் வண.பிக்கு.பாதாந்த் நாகராஜ் மற்றும் வண.பிக்கு.புத்தபிரகாசம் ஆகியோரின் முன்னிலையில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பின்வரும் பணிகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.
- மகா சங்கப் பேரவையின் மகா சங்காதிபதி உள்பட பிற பிக்கு மற்றும் பிக்குணிமார்கள் மற்றும் சங்க விகார்களின் கவுன்சில் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழாவிற்கான நாளினை குறித்தல் மற்றும் அதற்கான நிதிக்குழுவினை பரிந்துரை செய்தல்.
- அடுத்த ஓராண்டுக்கான திட்டங்களை முன்னெடுத்தல்.
- எதிர்காலத்தில் சங்கரத்தினர்கள் அனைவரும் வாக்களித்து விகார் கவுன்சில் நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் விதிமுறைகளை வகுத்தல்.
- விகார்களை அடையாளம் காணுதல், அவற்றை சீரமைப்பு செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான அறிக்கைகளை தயாரித்தல்.
- விகார்களில் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகளை பயிற்றுவித்து கண்காணித்தல், வழிகாட்டுதல்.
- இத்தற்காலிகக் குழு மேற்கொண்டப் பணிகளை மேற்கொண்டு பகவன் புத்தரின் அருளறத்தினை தமிழகம் எங்கும் உலகு தழுவிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.
தம்மத்தில் நிலைத்திருங்கள்.
அட்ட தீவ பவ.
சுப மங்களம்
நன்றி
இவண்
ஜா.கௌதம சன்னா வண.பிக்கு.போதி அம்பேத்கர்
நிறுவனர் மற்றும் தலைமை சங்க பரிபாலன மகா செயலர்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC) தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC)

1 Comment
வணக்கம்.
கவியமான் சித்தார்த்.
கடந்தாண்டு ஏப்ரல் 8, 2018ல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பெளத்தத்தை ஏற்று கடைப்பிடித்து வருகிேறேன்.
திருமணமும் 2020 ஆகத்து 24
ல் பெளத்த முறைப்படி செய்தோம்.