தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை மேற்கொண்ட பல்வேறு பணிகளும் காஞ்சிபுரத்தில் 18,02,2025 அன்று நடைபெற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தியாகனூர் மாநாட்டில் பேரவை 800 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பிக்கு சங்கத்தை மீட்டெடுத்து நிறுவியது. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் திரிபிடகத்தை ஓதி பகவன் புத்தரின் போதனைகளை நிலை நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கான பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை பின்வருமாறு காணலாம்.
2024 டிசம்பர் மாதம் பேரவையின் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் காஞ்சித்திருநாவுக்கரசு அவர்கள் உலக திரிபீடங்கள் ஓதும் பேரவை தமிழ்நாட்டில் திரிபிடகம் ஓதும் நிகழ்வை நடத்த விரும்புகிறது. அதற்கான ஏற்பாட்டை நாம் செய்யலாமா? என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார். அதை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை ஏற்றுக் கொண்டு செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கின.
தொடக்கத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசின் உதவியை கோருவதுடன் தமிழ்நாடு அரசின் மேற்பார்வையில் இந்நிகழ்ச்சி நடைபெறுவதின் மூலம் புத்த மதத்திற்கான அரசு அங்கீகாரத்தை நாம் உறுதி செய்ய முடியும் என்கின்ற கோணத்தில் இந்த நிகழ்வு ஒருங்கிணைப்புத் தொடங்கியது. அதற்காக சிறுபான்மை ஆணையத்திடம் ஆணை உறுப்பினர் வசந்த் அவர்கள் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதே நேரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்கள் தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்க விடுத்தார். அவரும் மாநாட்டிற்கு வருவதாக உறுதியளித்தார். ஆனால் சூழலின் காரணமாக அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களை குழு நேரில் சந்தித்து அவரது வருகை உறுதி செய்தது. மேலும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திரு மு.நாசர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவருக்கு முறையான அழைப்பை பேரவை அளித்தது. சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் அருட்திரு. ஜோ அருண் சேச அவர்கள் இந்நிகழ்வில் மிகுந்த ஆர்வம் காட்டி அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பேசி அரசின் பங்கேற்பை உறுதிப்படுத்தினார். எனவே நிழ்விற்கான பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆகவே குறுகிய கால இடைவெளியில் நிகழ்வை நடத்த வேண்டிய நிர்பந்தம் பேரவைக்கு வந்ததால் பல குழுக்களை அமைத்து பணிகளை நிறைவேற்ற குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனால் கால அவகாசம் குறைவாக இருந்ததால் குழுவினர் முழுமையாக இறங்கி பணியாற்ற முடியாத சூழல். எனவே தலைமை குழுவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் சூழல் உருவானது .ஆயினும் பணிகள் சிறப்பாக தொடங்கினர். பெரும் பொருட்செலவில் மாநாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
காஞ்சிபுத்த விகாரில் திரிபிடகம் போதும் மாநிகழ்வு நடைபெற உள்ளதால் அக்கோயில் சீர்படுத்தப்பட்டு புதர் மண்டி கிடந்த கோவில் வளாகம் சீரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு புத்த மதக் கொடிகள் நாட்டப்பட்டன. வழியெங்கும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இரவு முழுவதும் இப்பணிகள் முடிந்த பிறகு 18.02.2025 அன்று காலை 8 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 150 க்கும் மேற்பட்ட பிக்குகள் வரிசையாக இன்று புத்தர் சிலைகளை ஏந்தி நின்றனர். அவர்களுக்கு பின்னே பொதுமக்களும். முன்னே தமிழ்நாடு சங்கப் பேரவையின் முக்கிய நிர்வாகிகள் கௌதம சன்னா, காஞ்சித் திருநாவுக்கரசு, பார்த்திபன், வசந்த் ஆகியோர் புத்தர் சிலைகளை ஏந்தி வர ஊர்வலம் தொடங்கியது. வழி நடக்க திரிசரணமும் பஞ்சசீலமும் இசைக்கப்பட்டன. ஊர்வலத்தின் முன்பு மங்கள இசை முழங்க, மாநாட்டு திடலை நோக்கி பிக்குகளின் தம்மவலம் நடந்தது. இந்நிகழ்வு 800 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி மாநகரில் நூற்றுக்கணக்கான பிக்குகள் அனைவருக்கும் நிகழ்ச்சி என்பதால் அணிவகுக்கும் நிகழ்ச்சி என்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. பாதுகாப்பு ஏற்பாட்டை காவல்துறை சிறப்பாக மேற்கொண்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பிக்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அமைதியாக நடைபெற்ற இந்த யாத்திரை மாநாட்டு திடலை அடைந்தவுடன் அங்கே வைக்கப்பட்டு இருந்த புத்தரின் அஸ்தி தூண் பூஜை செய்யப்பட்டு பிக்குகளால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாட்டு பிக்குகளும் பேரவையின் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். புத்தரின் அஸ்தி திறப்பு விழா முடிந்தவுடன் போதி மரத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த மேடையில் பிக்குகள் அனைவரும் அமர்ந்து திரிபிடகம் ஓதும் நிகழ்வை தொடங்கினார்கள். இந்நிகழ்வு 800 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு அல்லது சஜயனா நிகழ்வை நிகழ்த்துகின்ற முதல் நிகழ்வாகும்.