தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை விதிமுறைகள் அங்கீகரித்தல் மற்றும் மாநில 2வது பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை விதிமுறைகள் அங்கீகரித்தல் மற்றும் 2வது பொதுக்குழு கூட்டம் சங்க பரிபாலன மகாசங்காதிபதி பிக்கு தம்மசீலர், துணை சஙாகாதிபதி பிக்கு புத்தபிரகாசம், பிக்கு ஜெயசீலர் பங்கேற்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமையில், சிறுபான்மை உறுப்பினர் அவை பொருளாளர் மகாதினகரன் வரவேற்பில், இணை செயலாளர் அம்பேத்ஆனந்தன் மற்றும் விகார் பரிபாலன சங்கரத்தினர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.
சங்கப் பேரவை ஆண்டறிக்கையை விகார் கவுன்சில் செயலாளர் ஆர் திருநாவுக்கரசு,
வரவு செலவு நிதிநிலை அறிக்கையை பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை ஆணையத்தில் பௌத்தர்களின் நலன் குறித்த அறிக்கையை சிறுபான்மை ஆணைய பௌத்த உறுப்பினர் வழக்கறிஞர் வசந்த், புத்த சின்னங்கள் பாதுகாப்பு குழு அறிக்கையை குழு செயலாளர் சு.சுந்தரவடிவேல், பௌத்த மகளிர் கழக அறிக்கையை அதன் பொருளாளர் ராதாஜெயலட்சுமி, பௌத்த இளையோர் கழக அறிக்கையை அதன் செயலாளர் தம்மதேவா, புதுச்சேரி சங்கப் பேரவையின் அறிக்கையை அதன் செயலாளர் பாக்கியலட்சுமி ஆகியோரும் சமர்பித்து பேசினர்.
சங்கப் பேரவையின் விதிமுறைகள் அடங்கிய நூலை இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தின் மீது வைத்து சங்கப்பீட பிக்குகள் முன்னிலையில் கௌதம சன்னா வெளியிட்டார். சங்கப்பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் விகார் பரிபாலன சங்கரத்தினர்கள் அனைவரும் நூல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
பொதுக்குழு தீர்மானங்களாக நாக்பூர் தீட்சாபூமி பயணத்திற்கு இலவச ரயில் திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர், சிறுபான்மை நலத்துறை முன்னாள் இன்னாள் அமைச்சர்கள், சிறுபான்மை ஆணைய தலைவர், துணைத்தலைவர், பௌத்த உறுப்பினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறது.
சங்கப்பேரவை விதிமுறைகள் ஏற்கப்பட்டு அதை நடைமுறையில் கடைப்பிடிக்கும் உறுதிமொழியை ஏற்கிறது,
அனைத்து விகார்களிலும் சங்கப் பேரவையின் பெயர்ப்பலகையை வைப்பதுடன் புத்தர் திருக்கோயில் என்று மாற்றம் செய்ய வேண்டும் என பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பௌத்தர்களாக மதமேற்ற அனைவரும் தங்களுடைய பௌத்த சான்றிதழ் அல்லது அரசிதழ் கெசட்டில் வெளியான நகலை சங்கப் பேரவையிடம் வழங்கி அங்கீகாரம் பெறவேண்டும்.
உலக திரிபிடக வழிபாட்டு அமைப்பு சங்கப்பேரவைக்கு வாய்ப்பளித்து, காஞ்சி புத்தர் திருக்கோயிலில் 2025 பிப்ரவரி 19 அன்று உலக நாடுகளில் உள்ள 200 வணக்கத்திற்குரிய பிக்குகள் பங்கேற்கும் உலக திரிபிடக வழிபாடு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட உறுதியேற்கிறது.
தமிழக பௌத்த வரலாற்றை மீட்டெடுக்கும் முன்னெடுப்பாக தமிழ்நாட்டின் பௌத்தம் என்ற தலைப்பில் வாரந்தோறும் 52 வாரங்கள் நடைபெற உள்ள இணையவழி தொடர் கருத்தரங்கில் அனைத்து விகார் சங்கரத்தினர்களும் கலந்துகொள்வதோடு தங்கள் திருக்கோயிலில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து விகார்களுக்கும் பேரவை திட்டமிடல் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரத்திற்கும் வேலூருக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலையில் பௌத்த கல்வி வளாகம் மற்றும் உயரமான பௌத்த ஸ்தூபி கட்டுவதற்கான திட்டம் அனைவரின் ஒத்துழைப்பாலும் வெற்றிபெற செய்ய வேண்டுகிறது. பொதுக்குழுவில் பங்கேற்றுள்ள, தன்னலமற்று சுயநலமற்று பௌத்தத்தை மட்டுமே வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டுகொண்டிருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் சங்கரத்தினர்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டு தீர்மானங்களாக நிறைவேற்றுகிறது. இறுதியாக புத்த சின்னங்கள் பாதுகாப்பு குழு பொறுப்பாளர் மழைமேனி பாண்டியன் நன்றி கூறினார்.