ஜெய்பீம்👍
அனிதா,
அறிவுச்சுடர் சாக்கிய புத்த விஹார், மொடையூர்
காஞ்சிபுரம் பௌத்த சங்கப் பேரவையில் அறிவுச்சுடர் மாணவர்கள் நாங்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி…..
பௌத்தம் பற்றி எங்களுக்கு தெரிந்திருந்தாலும் இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டோம்….
அண்ணன் கௌதம சன்னா அவர்கள் பௌத்த பிரிவு பற்றிய விவரங்களை பதிவு செய்தார்….. பௌத்தத்தில் பிக்குகள் தவறு செய்தாலும் அது தவறுதான் என்றார் … ஆனால் அது தவறு என்று அண்ணன் கூறியப்பிறகு தான் தெரிந்து கொண்டோம்…..
பௌத்தத்தில் மிக முக்கியமானது “தம்மம்” அந்த தம்மத்தை கடைப்பிடித்தாலே நாம் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக இருப்பார்கள் என்றார்….
அடுத்து பிக்குகள் அனைவருக்கும் தட்சனை வறுசை கொடுக்க இருந்தார்கள்….. அப்போது ஒரு அண்ணன் கூறினார் தட்சனை கொடுக்க தோழர்கள் இருக்காங்கமா… இருந்தாலும் நீங்க ஒரு (Uniform) ஆக இருக்கீங்க நீங்க வறுசை தட்டு எடுத்துட்டு வந்தா பார்க்க இன்னும் அழகா இருக்கும் சொன்னாங்க….. அப்போ எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது…. அப்போதுதான் Dress Code எவ்வளவு முக்கியமான ஒன்று என்று நினைத்தேன்….
அக்கா ஒருவர் கேட்டிருந்தாங்க இங்க வந்தவங்க எல்லோரும் ஆண்கள் தான் அதிகம் என்பதைவிட நீங்கள் பெண்கள் ஒரு Uniforma வந்து இருந்தது சந்தோஷமாக இருக்கு சொன்னாங்க…. எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது…. ஏனா பௌத்த சங்கப் பேரவையில் 60 புத்த விகார் இடம்பெற்றது…. அதில் அறிவுச்சுடர் சாக்கிய புத்த விகாரையும் இணைத்து சிறப்பித்தனர்….. எங்களால் எதுவும் முடியும் என்று சொல்ல கூடிய ஒரு பெரும் மகிழ்ச்சி….
(Father) இவங்களும் பௌத்தம் பற்றி பேசப்படும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது…..
இந்த நிகழ்வுகளில் அதிகமாக நாங்கள் தான் பங்கேற்றது போல் தோன்றியது எனக்கு…. ஏனா அர்ப்பனம் செய்யும் போது எங்களை மேடையில் ஏற்றி புத்த வந்தனம் கூறி, பஞ்சசீலம் கூறினர்…. எனக்கு ஒரு பிக்குகள் செய்வது போல் ஒரு பகுதி மகிழ்ச்சி….
நாங்கள் அனைவரும் புனித புத்தர் அவர்களை அர்ப்பனம் செய்துவிட்டு பிறகு பிக்குகள் அனைவரிடமும் அவர்கள் பாதம் தோட்டு ஆசிர்வாதம் வாங்கிய தரும் பெரும் நெகிழ்ச்சி அடைந்தோம்…..
எங்கள் அறிவுச்சுடர் சாக்கிய புத்த விகாரை தேர்ந்தெடுத்து சங்க ரத்தினர் என்ற அடையாள அட்டை கொடுத்த தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவைக்கு எங்கள் அறிவுச்சுடர் சார்பாக மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏…
அனிதா