நமோ புத்தா… நேற்று (07.11.2021) நடந்த முடிந்த தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை விழா.. இவ்விழாவானது பிரம்மாண்டம் என்பதைவிட மிகத் தெளிவான அணுகுமுறை பவுத்த பண்பாடு நிறைம்பிய விழாவாக காண்பதற்கு காட்சியளித்தது..
இந்நிகழ்வில் முதல் எனக்கு ஏற்பட்ட பெரு மகிழ்ச்சி இதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவர்களில் நாங்களும் நடத்திய விகார் ஒன்று.. என்னிடம் பௌத்தம் வழிமுறை பற்றி கேட்போருக்கு சரியான ஒரு விளக்கத்தையும் பதிலும் தர முடியாத சூழ்நிலையில் இதுவரை இயங்கிக் கொண்டிருந்தோம்.
இனி அப்படி இல்லாத வகையில் இருக்கும் என இந்த நிகழ்வு இருந்தது.
சங்கரத்தினர்களுடைய அடையாள அட்டை வழங்கியதை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு தலமை இடம் இருக்கிறது. எங்களுக்கான தீர்வு காண ஒரு அமைப்பு இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு முழு நிறைவு ஏற்பட்ட து. இனி நாங்கள் யார் என்பதை அரசு ரீதியான அலுவலங்களிலும் மற்ற இடங்களிலோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும்,பௌத்தர்கள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கும் அடையாள அட்டையை வழங்கியது பெருமகிழ்ச்சி அளிக்கிறது..
குறிப்பாக எதிர்கால இருபது ஆண்டுகளுக்குப் பிறகாவது பேசப்படும் பொழுது 800 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கிய இந்த இந்த தமிழ்நாடு பௌத்த சங்க பேரவையின் அங்கத்தினராக நானும் இருந்தேன் என்று எதிர்கால தலைமுறை பேசப்படும்போது என் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதை நினைத்து பூரிப்படைகிறேன்..
இரண்டாவதாக அனைத்து மதத் தலைவர்களையும் நம் பௌத்த பண்பாட்டு விழாவில் அரங்கேற்றியது மிகச்சிறப்பு அதுவும் அவர்கள் மூலமாக கௌதம புத்தரை போதிக்க செய்தது. குறிப்பாக ஒரு மதத் தலைவர் என்பவர் எப்படி பேசும் அணுகுமுறையும் தன் மதம் தனக்கு சிறந்ததாக இருந்தாலும் தன்னை மதித்துப் அழைப்பவர்கள் நிகழ்வில் நாம் என்ன பேச வேண்டும் எதைப் பேச வேண்டும் என்பதைத் தெளிவாக சுருக்கமாக உரையாற்றி தான் ஒரு மதத்தலைவர் ( குரு) என்பதை சொல்லாமலே தெரியும் படி அவர்களின் வருகையும்,உரையும் இருந்தது.. அவர்களும் புத்தரை வணங்கிச் சென்று வணக்கத்திற்குரிய பிக்குகளையும் சமமாக பாவித்து அவர்களும் வணங்கிச் சென்றது பெரும் சிறப்பு.. இதுவரை யாரும் யாரும் செய்திடாத ஒரு செயலாக இருந்தது..
மூன்றாவதாக நம்முடைய தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராக நேர்த்தியாக உண்மையாக நேர்மையாக சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கும் நம்முடைய அண்ணன் கௌதம்சன்னா அவர்களின் உரை மிக சிறப்பாக இருந்தது..
குறிப்பாக 800 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இதை ஏன் எடுத்தோம் , இடைப்பட்ட காலத்தில் மறுக்கப்பட்டது காரணம் என்ன,, என்பதை உணர வைத்ததும் இனி வரும் காலங்களில் நாம் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அடையாளத்தை எப்படி கொண்டு வரவேண்டும் என்பதற்கான ஒரு விளக்க உரையும் குறிப்பாக நான் ஒரு பவுத்தன் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் கடைசியில் அவர் சொன்ன ஒரு கருத்து எவ்வளவு கேள்வி கேட்டாலும் கேளுங்கள் அதற்கு இரண்டு ஆண்டுகள் நேரம் கொடுங்கள் என்று பதில் சொன்ன விதம் தான் ஒரு மிகச்சிறந்த பௌத்தர் என்பதை அடையாளப்படுத்தி கொண்டதாக உணர்கிறேன்.. அப்படி என்றால் கேள்வி கேட்பவர், தன்னை அந்த கேள்வியை கேட்காத அளவில் நடந்து கொள்ளும் நிலையில் இருக்கிறாரா பேசியது என்று யோசிக்க வைத்தது மிகச்சிறப்பு..
அதோடு சங்கரத்தினர்களுக்கும் பயிற்சி கொடுத்து தமிழ்நாடு முழுவதும் ஒரே வகையான பண்பாட்டு விகார்களையும் ஒரே வகையான பண்பாட்டு வழிமுறைகளையும் செலுத்த வேண்டும் என்று முக்கிய நோக்கமாக நேற்று விரிவாக வரலாற்று ஒப்பிடோடு விளக்கமாக மிகச்சிறப்பாக உரையாற்றியது வந்திருந்த அத்தனை பேருக்கும் குறிப்பாக விமர்சனக் கண்ணோடு வந்திருந்த ஒரு சிலருக்கும் தெளிவு பெற்று சென்றிருப்பார்கள் என்ற மகிழ்ச்சி கிடைத்தது.
மற்றும் மழையின் காரணத்தால் நிகழ்வு கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்தாலும் முடித்தது சொன்ன நேரத்தில் முடித்து வைத்தது சிறப்பு.. நிகழ்ச்சியை பேசுபவர்களும் துண்டு சீட்டு கொடுக்காமலேயே தனக்கான ஒழுக்க நெறியோடு முறையில் பேசி முடித்ததும், குறிப்பாக மத தலைவர்கள் சுருங்கச் சொல்லி தன்உரையை முடித்ததும் மிக சிறப்பு..
குறிப்பாக செங்கல்பட்டு பாதர் அவருடைய உரை மிகச் சிறப்பு அவர் பேசிய கருத்துக்கள் நாம் ஏற்கனவே கேட்டிருந்தாலும் படித்திருந்தாலும் ஆனால் அவர் சொன்ன விதம் அந்த அழகிய தமிழ் நிதானம் பொறுமை தெளிவு அனைவரையும் தன்வசப்படுத்திக் கொண்டது அய்யாவின் உரை..
அடுத்து மேடையில் வணக்கத்திற்குரிய தமிழ்நாடு பிக்குகள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் பார்த்தது பெருமகிழ்ச்சி. இன்னும் இருக்கின்ற பிக்கு களும் வருகைதந்து இருந்தால் இன்னும் அந்த அரங்கத்தில் புத்தர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.. அதுவும் கட்டாயம் நடக்கும் என்பது உறுதி..
தமிழில் நாட்டில் 60 விகார்கள் என்பதை நினைக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியோ, அவர்களை ஒன்றிணைத்து செயல்பட வைக்க செய்ய இருப்பது பெரும் மகிழ்ச்சி..
எங்கள் மூலம் வருகை தந்த கல்லூரி பிள்ளைகள் பல விஷயங்கள் கற்று இருக்கிறார்கள் என்பதை அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டதில் உணர்ந்து கொண்டேன்.
அவர்கள் காலத்தில் கட்டாயமாக எங்கள் ஊரில் தமிழ்நாடு பௌத்த சங்க பேரவையை நோக்கம் என்னவோ அது கட்டாயமாக 100% நடைபெறும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.. 20 நபர்கள் தான் அழைத்து வந்தேன்..
இன்னும் அதிகம் பேரை அழைத்து வந்திருக்கலாம் என்று தோன்றியது.. சிரமத்தோடு வந்தாலும் நிகழ்வு முடிந்த பிறகு அழைத்து ,அவர்களை அழைத்து வராமல் இருந்திருந்தால் பெரும் குற்ற உணர்ச்சியுடன் சென்றிருப்பேன்..
நிகழ்ச்சியோடு சென்றேன் நான் உணர்ந்ததை விட என் பிள்ளைகள் பெரிதும் புரிந்திருக்கிறார்கள்.. எனக்கு ஒரு பெரிய சுமை குறைந்து இருக்கிறது. இனி அவர்கள் பவுத்த விகாரை வேலைகளை எடுத்து செய்வார் கள் என்று உணர்ந்தேன் நேற்றைய நிகழ்வை பகிர்ந்து கொண்டதை நினைக்கும் பொழுது..
இப்பெரும் வாய்ப்பினை எங்கள் அறிவுச்சுடர் பிள்ளைகளுக்கு கொடுத்தமைக்கும், தமிழ்நாடு பௌத்த சங்க பேரவை யில் அறிவுச்சுடர் சாக்கிய புத்த விகாரை பெயரையும் இணைத்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள் சொல்லி மகிழ்ச்சி அடைகிறேன்..
மற்றும் நிகழ்வின் இடையில் புத்த வந்தன வழிபாட்டில் நம்முடைய பிள்ளைகளுக்கும் வழிபாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தந்தமைக்கு அன்பு நன்றிகள் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..
அடுத்து மேடை அலங்காரம் பின்பு அமைக்க பட்ட பேனர் கவனித்தேன். பல மேடைகளில் நம் சமூக ரீதியாக புகைப்படங்கள் வைப்பது உண்டு. ஆனால் இந்த மேடையில் வைத்த புகைப்படம் அனைத்தும் பௌத்தர்களாக,பௌத்திற்காக வாழ்ந்த வரலாற்று தலைவர்களை பதிவு செய்திருப்பது மிக சிறப்பு.. மக்கள் நாமும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கும் தோன்றச் செய்தது.
தமிழ்நாட்டுக்கு என்று ஒரு பௌத்த கொடி அதைவிட சிறப்பு.. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம் இதுதான் என்று நாம் சொல்கிறோம் இல்லையோ எதிர்காலத்தில் உலக நாடுகள் அனைவரும் தமிழ்நாட்டில் பௌத்தம் இதுதான் என்று சொல்லும் அளவிற்கு வரலாற்று வளர்ச்சி ஆக மாறும் என்பதில் பெரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. எதிர் கால வரலாற்றில் என்ன எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்து 800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே சிந்தனையோடு இந்த தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவை உருவாக்கி முழுநேரமாக இதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நம்முடைய பெருமைக்குரிய உறவான அன்புக்குரிய அண்ணன் கௌதம சன்னா அண்ணா அவர்களுக்கும் இந்நேரத்தில் பேரன்பு மிக்க நன்றி சொல்லி மகிழ்வதில் பெருமை கொள்கிறேன்..
அடுத்தது இந்த விழாவை நேர்த்தியாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தாலும் அதன் வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நம்முடைய தமிழ்நாடு பக்தர்கள் சங்கப் பேரவையின் விழாக் குழுவினராக செயல்பட்டுக் கொண்டிருந்த பௌத்த பண்பாட்டு விழா முக்கிய நிர்வாகிகள் நம்முடைய பௌத்த உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பெரிய நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதோடு வருத்தமும் அடைகிறேன் என்னால் அந்த விழா குழுவில் ஒரு நபராக இருந்து செயல் முடியவில்லை என்ற எண்ணத்தோடு…
இறுதியாக தமிழ்நாடு பௌத்த சங்க பேரவை உறுப்பினர்கள் பதவியேற்ற சங்கரத்தினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு செய்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி சொல்லி நம் அண்ணன் சொன்னது போல் கட்டாயமாக இதுவரை பேசிக்கொண்டு இருந்த பௌத்தம் இனி ஒரு முறையான வடிவமாக மாறி இருக்கிறது ஆகவே கட்டாயம் விமர்சித்துக் கொண்டிருப்பவர்களும் வேறு ஒரு காரணத்தினால் இதை குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்களும் கட்டாயம் இதை உணர்ந்து விரைவில் இணைவார்கள் என்ற நம்பிக்கை நேற்றைய நிகழ்வுகள் எனக்குள் தோன்ற செய்தது..
குறிப்பாக நம்முடைய சன்னா அண்ணா அவர்களின் உரையில் அவ்வளவு தெளிவும் நேர்மையும் உண்மையும் இருந்தது அதை அருகிலிருந்து கேட்டால் மட்டுமே அதை உணர்வார்கள் புரிந்து கொள்வார்கள் அல்லது இதே முறையை வேறொரு மூலம் தெரிந்து கொண்டால் கட்டாயமாக அவர்கள் புரிர்ந்து இணைவார்கள் அதையும் தாண்டி நாம் இந்த சங்க பேரவை பௌத்த சங்கத்தின் மூலமாக செய்கின்ற அடுத்து ஒவ்வொரு வேலையையும் ஒருங்கிணைப்பும் அதன் வளர்ச்சியும் அவர்கள் கண்கூடாக பார்க்கும் பொழுது கட்டாயம் வருத்தம் கொள்வார்கள்…
விமர்சனங்கள் வருவது இயல்பு அதை புறந்தள்ளிவிட்டு சங்கரத்தினர்கள் மற்றும் சங்கப் பேரவையின் அனைத்து நிர்வாகிகளும் வளர்ச்சி பெறுவதற்கான செயலை இந்த தமிழ்நாடு பௌத்த சங்க பேரவை வழிகாட்டுதலில் மூலம் செயல் படுவோமானால் மற்றவர்களை யும் சிந்திக்க வைக்கும் இணைய வைக்கும் தன்னுடைய தவறை உணரச் செய்யும் என்பதை கூறிக்கொண்டு மீண்டும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான சங்க அடுத்த கூட்டத்தில் சந்திப்போம் என்று கூறி மகிழ்கிறோம்..
சங்கரத்தினர் தம்மதேவா


