தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை தொடக்க விழா மற்றும் சங்கரத்தினர்கள் அறிமுக விழா23,11,2021 அன்று காஞ்சிபுரத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டது. நிகழ்வை ஒருங்கிணைக்க தலைமைக் குழு அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அண்ணா கலையரங்கில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை நடத்த திட்டமிடப்பட்டு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பே மாநாட்டு கூடம் அலங்கரிக்கப்பட்டது. அக்கடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் பௌத்த கொடி பறக்க விடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்கு மங்கள மேளம் குழுவும் அமைக்கப்பட்டது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அனைத்து மத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருக்கும் வைணவ மத ஜியர், மயிலம் சைவ மட ஆதினம், கிறிஸ்துவ பாதிரியார்கள், இஸ்லாமிய குருமார்கள், ஜெயின சமய தலைவர், சீக்கிய மதத்தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மேற்கண்ட . சங்கரத்தினர்களுக்கு என்று தனி சீருடை தைத்து வரவழைக்கப்பட்டிருந்தது மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்வு தொடங்கியது முதல் கட்டமாக அவைக்கு வந்த சங்கரத்தினர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டன அவர்கள் சீருடை அணிந்தபடி அரங்கத்திற்குள் வரும் விக்குமார்களை மேளதாளத்துடன் மங்கல கொடையுடனும் வரவேற்று அழைத்து வந்து மேடையில் அவர்களை அமர வைத்தனர் பிறகு வண.பிக்கு தம்மசீலர் அவர்களின் தலைமையில் திரிசரணம் மற்றும் பஞ்சசீலம் ஓதப்பட்டது அதை தொடர்ந்து வரவேற்பு உரையை கோ.பார்த்திபன் அவர்கள் ஆற்றினார். பிறகு ஒவ்வொரு மத தலைவர்களும் வரிசையாக வாழ்த்தி பேசினார்கள் வாழ்த்தி பேசினர்.
அனைவரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை முன்னெடுப்பதுடன் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துகின்ற செயலில் அது தொடக்கம் முதலே முனைப்பு காட்டுவதை வரவேற்று வாழ்த்தினார்கள். மேலும் தலைமை பொறுப்பேற்று பொறுப்பு ஏற்க உள்ள விக்கு சங்கத்திற்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மத தலைவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. அவற்றை வண.பிக்குமார்களே வழங்கினார்கள்.
தொடர்ந்து, நிகழ்ச்சியின் முதன்மை நிகழ்வான சங்கரத்தினர் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து மிக்குமார்கள் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட கௌதம சன்னா அவர்கள் உறுதிமொழி ஏற்பு பத்திரத்தை வாசிக்க அனைத்து சங்கரத்தினர்களும் சங்கரத்தினர்களாக உறுதி ஏற்று கொண்டனர். பின்னர் அதற்கான சான்று மற்றும் அடையாள அட்டையினை பிக்குமார்களிடம் ஒவ்வொருவராக பெற்றுக் கொண்டனர். தாங்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை பகவன் புத்தரின் சிலை முன்பு வைத்து வணங்கி தங்களது இருக்கையில் அமர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட கௌதம சன்னா விரிவான உரையினை ஆற்றினார்.
பௌத்தம் எப்படி தோன்றியது, எப்படி வளர்ந்தது, எவ்வாறு அது வீழ்த்தப்பட்டது என்பதற்கான வரலாற்று காரணங்களை விளக்கியதுடன், 800 ஆண்டுகளுக்கு பிறகு பௌத்தத்தை மீட்டெடுப்பதற்கான தேவை ஏன் வந்தது என்பதை பற்றி விரிவாக விளக்கினார். பண்டிதர், அம்பேத்கர் ஆகியோரின் பங்களிப்பையும் அவர்களுக்கு முன்பு பௌத்தத்தை முன்னெடுத்த அசோகர் தொடங்கி தர்மபாலர் வரையிலான அனைத்து முன்னோடிகளையும் நினைவு கூர்ந்தார். காஞ்சி பவுத்தம் வளமாக வாழ்ந்த மண் அந்த மண்ணில் மீண்டும் பௌத்த மதத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் நாம் இறங்கி இருக்கின்றோம். சங்கரத்தினர்களாக பொறுப்பெடுத்தவர்கள் முனைப்போடும் ஆற்றலோடும் உறுதியோடும் பணியாற்ற வேண்டும். நமது முன்னோடிகளின் கனவை நீங்கள் நனவாக்குவதின் மூலமாக ஒரு வரலாற்றுக் கடமையை நீங்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறினார்.
நாம் சங்கமாக ஒருங்கிணைந்து இருக்கிறோம். ஆனால் இன்னும் சங்கம் அறிவிக்கப்படவில்லை. ஓராண்டுக்கு நாம் முன்னேற்பாடுகளை செய்துவிட்டு பிறகு சங்கத்தை அறிவிப்பதற்கான பணியினை தொடங்குவோம். அதுவரை பிக்குகள் தங்களை அமைப்பாக்கிக் கொள்வதற்கு, சங்கமாக்கிக் கொள்வதற்கான காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான காலம் கனிந்த உடன் சங்கத்தை அறிவிப்போம். அதுவரையில் நாம் இணைந்து செயல்படுவோம் என்று கூறி உரையை முடித்தார்.
அதற்கு முன்னதாக இந்நிகழ்வில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை திட்டமிடல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்கின்ற உறுதியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில் காஞ்சி திருநாவுக்கரசு அவர்கள் நன்றியுரை வழங்க நிறைவு பெற்றது நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காஞ்சிபுர விகாரன் சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை காஞ்சி புத்த விகார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமானோர் மிகுந்த நம்பிக்கையோடும் முகமலர்ச்சியோடும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பௌத்தம் மீண்டும் நீண்டுகிறது என்கின்ற நம்பிக்கையை வழங்கியது.
இந்நிகழ்வை காஞ்சி திருநாவுக்கரசு, கோ.பார்த்திபன், போதிசந்திரன், மகா தினகரன், எஸ்.வசந்த், அம்பேத் அரசு, காஞ்சி கௌதம் உள்ளிட்ட பலர் ஒருங்கிணைத்தனர்



















































































































