தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் தமிழ்நாடு மாவட்ட சிறுபான்மை உறுப்பினர் அவையின் முதல் கலந்தாய்வு கூட்டம்- 09-07-2023
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர் வழிகாட்டுதலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு மாவட்ட சிறுபான்மையினர் உறுப்பினர் அவையின் முதல் மாநில கலந்தாய்வு கூட்டம் சிறுபான்மை உறுப்பினர் அவையின் செயலாளர் ஆர்.போதிசந்திரன் தலைமையில், பொருளாளர் மகா தினகரன் வரவேற்பில் மகா சங்க செயலாளர் பிக்கு போதி அம்பேத்கர், விகார் சங்க செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி.பார்த்திபன், பிக்கு. பௌத்தம் பாலா, பிக்கு.ஜெயசீலர், இளையோர் கழக செயலாளர் தம்மதேவா ஆகியோர் முன்னிலையில் சென்னை இக்சா மையத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மாண்புமிகு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு பௌத்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து பாண்டிச்சேரி உள்ளிட்ட 39 மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு உறுப்பினர்களை பாராட்டி பேசினார். மேலும் தமிழ்நாடு அரசு மாவட்ட பௌத்த சிறுபான்மையினர் நலக்குழு உறுப்பினர்களாக உத்தரவு பெற்றுள்ள மாவட்ட உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி தம்மதர்மேந்திரா, செங்கல்பட்டு ஏசி குமார், கரூர் சி.அழகர், தேனி கௌதம் அம்பேத்கர், விருதுநகர் அ.இளன், தர்மபுரி பூ.பெருமாள், சேலம் ஆர்.கே.தேவேந்திரன், தென்காசி கோ.ஆ.சாமி உள்ளிட்ட 16 சிறுபான்மை உறுப்பினர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மீதமுள்ள புதுச்சேரி உள்ளிட்ட 23 உறுப்பினர்களுக்கும் விரைவில் உத்தரவு வழங்கப்படும் என்றும் உறுதியளித்து பேசினார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் அவர்களின் பணிகளுக்கும் சிறுபான்மை ஆணையத்தின் ஒத்துழைப்பிற்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்து, பௌத்த சிறுபான்மையின உறுப்பினர்களை மக்களிடையே அறிமுகம் செய்வதற்கான செயல்திட்டம், அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள், பௌத்தர்களின் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களை பெறுவதற்கான பணிகள், பிக்கு பிக்குனியர்களின் நலன், தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பை அங்கீகரித்தல், ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பௌத்த திருக்கோயில்களை அரசின் அங்கீகாரத்திற்கு உட்படுத்துதல், மத மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகள் மற்றும் பௌத்த அமைப்புகளை ஒருகுடையின்கீழ் கொண்டுவருதல் ஆகிய தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். பொறியாளர் சுந்தரவடிவேல் தலைமையில் புத்தர் சிலைகள் மீட்பு சொத்து பராமரிப்புக்குழு மற்றும் பிக்கு போதிஅம்பேத்கர் தலைமையில் தலைமை பௌத்த மத அமைப்பின் விதிமுறைகள் உருவாக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டது. மங்கள நிறைவாக விகார் கவுன்சில் துணை செயலாளர் வழக்கறிஞர் வசந்த் நன்றி கூறினார்.
கடலூர் வீ.சரளாதேவிவீரப்பன், கிருஷ்ணகிரி மகேந்திர வர்மா, தஞ்சாவூர் சி.வினோத்குமார், திருவண்ணாமலை மு.புண்ணியமூர்த்தி, பெரம்பலூர் ஆதி ராஜா, திருவாரூர் ராஜேந்திரன், தூத்துக்குடி மைக்கேல் ராஜ், நாகப்பட்டினம் மு.ரமணி, புதுக்கோட்டை அ.ஜீவா, மதுரை பரிமளாதேவி, புதுச்சேரி ப.பாக்கியலட்சுமி ஆகிய சிறுபான்மை நலக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











