தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில்
தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்க மாநில கலந்தாய்வு கூட்டம்-23-09-2023
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்க மாநில கலந்தாய்வு கூட்டம் கோவை வனமலர் வளாகத்தில் பௌத்த பெண்கள் இயக்க செயலாளர் கே.பிரியா தலைமையில், பொருளாளர் ராதாஜெயலட்சுமி வரவேற்பில், சீலா மண்டல செயலாளர் தி.கலைச்செல்வி, நெக்கமா மண்டல இணை செயலாளர்கள் வீ.சரளாதேவி, ப.பாக்கியலட்சுமி, தானா மண்டல துணை செயலாளர் கனிமொழி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பிரேமா, அபிராமி, பேராசிரியர் பிரியதர்சினி, கலைச்செல்வி, கற்பகம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.
பிக்கு சங்க வடக்கு மண்டல செயலாளர் வண.பிக்கு புத்தபிரகாசம் புத்தவந்தனம் கூறி துவக்கிவைத்தார்.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பௌத்த பெண்கள் இயக்க பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்வில் விகார் கவுன்சில் செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், இணை செயலாளர் எஸ்.வசந்த், சிறுபான்மையினர் உறுபினரவை செயலாளர் ஆர்.போதிசந்திரன், பொருளாளர் மகா தினகரன், புத்தர் சிலைகள் மீட்புக்குழு செயலாளர் சு.சுந்தரவடிவேல், இணை செயலாளர்கள் ஆர்.கே.தேவேந்திரன், பௌத்த பெருமாள், இளையோர் கழக செயலாளர் க.தம்மதேவா, அ.செல்வரசன், ரகு, செந்தில் மற்றும் விஞ்ஞானி சேகர், காஞ்சி கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டு பௌத்த பெண்கள் இயக்க பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினர். இறுதியாக பௌத்த பெண்கள் இயக்க தானா மண்டல செயலாளர் எல்.சந்திரிகா நன்றி கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமையினை மனமுவந்து ஏற்றுக்கொண்டு தமிழகம் முழுவதும் பெண்களை ஒருங்கிணைத்து பௌத்த மதத்தை மக்கள் மயமாக்க பௌத்த பெண்கள் இயக்கம் பணியாற்றும்,
தமிழக அரசிடம் சங்கப்பேரவை பௌத்தர்களுக்கான அனைத்து உரிமைகளையும் நலன்களையும் பெற்றுத்தர மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கும்,
பௌத்த பெண்கள் இயக்கத்தை அமைத்து பொறுப்பாளர்களை நியமனம் செய்த தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்களுக்கும், மகா சங்காதிபதி அவர்களுக்கும் பௌத்த பெண்கள் இயக்கம் நன்றி கூறுகிறது.
பௌத்தத்தை அனைத்து குடும்பங்களிலும் வாழ்வியல் நெறியாக கடைபிடிக்கும் பண்பாட்டு நடைமுறையை செயல்படுத்த இயக்கம் பணியாற்றும்,
பௌத்தர்கள் அனைவரும் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவைப்படும் திட்டங்களை இயக்கம் முன்னெடுக்கும்,
அனைத்து மட்டங்களிலும் பெண் பொறுப்பாளர்களை நியமிக்க முழுமூச்சுடன் இயக்கம் பணியாற்றும்,
பௌத்த பெண்கள் இயக்கத்தின் அமைப்பு விதிமுறைகளையும் வழிகாட்டு நெறிகளையும் உருவாக்கக்குழு அமைக்கப்படும். அக்குழு உருவாக்கும் முன் வரைவை சீராய்ந்து இயக்கம் கடைபிடிக்கும்,
ஒவ்வொரு ஊரிலும் பௌத்த திருக்கோயில்கள் அமைத்து தின, வார மற்றும் பௌர்ணமி வழிபாடுகள் நடத்தப்படவேண்டும். பௌத்த பெண்கள் இயக்கம் அதை தீவிரமாக முன்னெடுக்கும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

















