தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவையின்
தமிழ்நாடு பௌத்த இளையோர் கழக கலந்தாய்வு கூட்டம்-30-07-2023
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்த இளையோர் கழகம் முதல் மாநில கலந்தாய்வு கூட்டம் மகா சங்காதிபதி பிக்கு தம்மசீலர், மகா சங்க வடக்கு மண்டல செயலாளர் பிக்கு புத்தபிரகாசம் ஆகியோர் முன்னிலையில், பௌத்த இளையோர் கழக செயலாளர் க.தம்மதேவா தலைமையில் துணைச்செயலாளர் ஆர்.பாக்கியராஜ் வரவேற்பில் செஞ்சியில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழ்நாடு பௌத்த இளையோர் கழக பொறுப்பாளர்களான செந்தில்குமார், ஆதிராஜா, சா.ராம்ஜி, பு.ஞானம், வ.சிவா, எ.ரகு, நா.முத்துகுமார், த.தேவேந்திரன், கலைவாணன், செல்வமணி, கௌதம்சத்துவா ஆகியோர்களை அறிமுகம் செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை விகார் கவுன்சில் செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை உறுப்பினரவை செயலாளர் ஆர்.போதிசந்திரன், துணை செயலாளர் எஸ்.வசந்த், கிழக்கு மண்டல செயலாளர் தம்மதர்மேந்திரா, புத்தர் சிலைகள் மீட்புக்குழு செயலாளர் சு.சுந்தரவடிவேல், பொருளாளர் மழைமேனிபாண்டியன், பௌத்த மகளிர் கழக பொறுப்பாளர்கள் தி.லஷ்மிபாய், ஆர்.ஆதிரை, ராதாஜெயலட்சுமி, பாண்டிச்சேரி சங்கப்பேரவை பாக்கியலஷ்மி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இளையோர் கழக பொறுப்பாளர்களை வாழ்த்திப்பேசினர்.
கலந்தாய்வு கூட்ட தீர்மானங்களாக
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை ஒருங்கிணைக்கும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக செயல்படுவதால் பேரவை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பௌத்த இளையோர் கழகம் என்றும் துணைநிற்கும்,
பகவன் புத்தரின் அறத்தையும், தம்மத்தையும் நாடு முழுவதும் பரப்புவதற்கான பரப்புரை பயணத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை பணிகளோடு பௌத்த இளையோர் கழகம் முன்னணியில் நின்று செயல்படும்,
பௌத்த இளையோர் கழகம் சார்பில் ஒவ்வொரு புத்தர் திருக்கோயில்கள், தம்மாலயம் மற்றும் விகார்களில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்ச்சிகளில் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை திரட்டி ஒவ்வொரு வாரமும் பௌத்தக்கூடல் நிகழ்வுகளில் பங்கெடுக்க வைப்பதற்கான பணிகளை பௌத்த இளையோர் கழகம் மேற்கொள்ளும்.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக 10 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அந்த மண்டல ஒருங்கிணைப்பை அப்படியே பின்பற்றி ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொருத்தமான மற்றும் தகுதியான பொறுப்பாளர்களை நியமனம் செய்ய ஒவ்வொரு மாவட்டம் மற்றும் பகுதி வாரியாக இளையோர்களை பொறுப்பாளர்களாக நியமித்து களப்பணிகளை முன்னெடுக்க இளையோர் கழகம் முயற்சி செய்யும்,
பேரவையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் அனைத்து புத்தர் திருக்கோயில்கள் மற்றும் விகார்களில் பௌத்த இளைஞர்களுக்கான தனி பாசறை ஒன்றை அமைக்க வேண்டும்.
விரைவில் பௌத்தத்தை பின்பற்றும் இளைஞர்களை திரட்டி ஒரு மாபெரும் மாநாட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதென்றும் பௌத்த இளையோர் கழகம் சங்கப் பேரவையிடம் முன்மொழிந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில் செஞ்சி பௌத்த சங்க சகோதரர்கள் மற்றும் பௌத்த இளையோர் கழக சங்கரத்தினர்கள் வல்லம் திருநாவுக்கரசு, ஜீவேந்திரன், முனைவர் சாக்கியாசக்தி, சொரத்தூர் ராஜவேணி, மாவட்டம்பாடி பொன்கோவிந்தன், மணலப்பாடி சக்திவேல், கம்மந்தூர் பார்த்திபன், வீரணாமூர் சுரேஷ், மீனம்பூர் வெற்றி, வடதாரம் ஜெகன் மற்றும் அறிவுச்சுடர் கல்வி மைய ஆசிரியர்கள், மாணாக்கர்கள் தீர்மானங்களை வழிமொழிந்து சிறப்பித்தனர்.
மங்கள நிறைவாக புத்தர் சிலைகள் மீட்புக்குழு பொறுப்பாளர் எம்.புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.







