தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை துவக்க விழா பற்றி சங்கரத்தினர் ஆ.பரசு கருத்து
காஞ்சியில் நேற்று நடைபெற்ற பெளத்த மாநாட்டில் பங்குபெற்றது மிகுந்த மனநிறைவு தந்தது. ஆண்டான்டுகால ஏக்கமல்லவா என்கிற கேள்வியோடே என்னை கேட்டுக்கொண்டே விழாவினை ரசித்து சென்றேன்.
மேடையின் பாங்கை சொல்லவேண்டும் என்றுச்சொன்னால் வள்ளுவரின் படம் என ஒவ்வொன்றும் அருமையும்,புதுமையும். செம்மொழி மாநாட்டை நினைவுப்படுத்தியது. மேடையில் வீற்றிருந்த அழகிய தோற்றம்.
நாதஸ்வரம் ஓதவும் தவுலின் வாத்தியமும் பட்டத்து குடையும் அதன் கீழே சங்காதிபதிகளின் அணிவகுப்பும் ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்ற என் மனநிலையை என்னுடன் வந்திருந்த உறவுகளிடம் சொல்லி மகிழ்ந்தேன்.
விழாவில் பேசியவர்கள் இலக்கியமும் அறிவியலும் இணைந்த பேரூரையை இதுவரை நான் எங்கும் கேட்டிடாதவை. குறிப்பாக தன் வாழ்நாளை பெளத்த வளர்ச்சிக்கு வித்திட்ட எங்களின் பெளத்த பெரியார் தங்கவயல் வாணிதாசரின் சிறிய உரையானாலும் அழகிய உரையாக இருந்தது. உரியவருக்கு உரிய அங்கீகாரம் தந்த விழாகுழுவினரை பாராட்டிட வார்த்தைகள் இல்லை.
பெளத்த பிக்குகளின் அணிவகுப்பு மற்றமத பெரியவர்களின் போதனைகள் பெளத்தம் அனைவருக்குமானது என்பதனை எடுத்துரைப்பது போல் இருந்தது.அவர்களின் பேரூரைகள்.
விழாவினை தொகுத்த பார்த்திபன் ஐயா போதிச்சந்தின் ஐயா அம்பேத் ஆனந்தன் ஐயா என அனைவரின் அர்ப்பணிப்பும் நாளைய தலைமுறைகளாகிய நாங்கள் பின்பற்றவேண்டியவை.
விழாவின் முடிவுரையை வரலாற்று ஆய்வுகளோடும் சான்றுகளோடும் பவுத்த வகுப்பெடுத்துச்சென்றார்.
நம் முதன்மை ஒருங்கிணைப்பாளரான கெளதம் சன்னா அவர்கள்.அவரின் உரையானது பெளத்தத்தின் பாதையை எப்படி நாம் அடைய முடியும் என்கிறதை ஆய்வுகளோடு எடுத்துரைத்தது இன்னொரு சிறப்பு.
அண்ணல் அம்பேத்கரின் வாழ்நாள் லட்சியமான பௌத்த நெறிமுறையை ஒவ்வொரு இல்லம் தோறும் கொண்டு செல்ல வேண்டும். என்கிற உந்துவிசையை தந்தது இந்நிகழ்வு.
விழாவிற்கு குறையாக மழை மட்டுமே இருந்ததென்று முடிக்கிறேன்.
திருத்தணி சங்கமித்திரை விஹாரின் சங்கரத்தினரான ஆ.பரசு.
